20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் இத் தீர்மானம், அவைத்தலைவர் ஊடாக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இத் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாதென முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை முன்வைக்கப்பட்ட ஏனைய மாகாண சபைகள் பெரும்பாலானவற்றில் இத் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளும் இதனை நிராகரிக்குமென எதிர்பார்க்கப்பட நிலையிலேயே வடக்கு மாகாண சபை இவ் முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts