மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு நேற்று இரவு 6.30 மணிக்கு நடைபெற வேண்டிய நிலையில் இருந்தும், இரவு 8.00 மணி வரை அது தள்ளிப் போடப்பட்டமைக்கு கூட்டு எதிர்க் கட்சியினர் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து, மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தைக் காட்டுவதற்கே இவ்வாறு வாக்கெடுப்பைத் தள்ளிப்போட்டதாகவும் கூட்டு எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.