2.O மூலம் இந்திய சினிமாவை இந்த உலகுக்கு காட்டுவோம் : லைக்கா

எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக தற்போது ‛2.O படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஷங்கர் முன்பை விட இன்னும் பிரமாண்டமாய் இயக்குகிறார்.

2-o-rajini

லைக்கா நிறுவனம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 75 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ‛2.O படத்தின் அதிகாரப்பூர்வமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ‛2.O படம் பற்றி லைக்கா நிறுவனம் சார்பில் டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்னும் ஒரே மாதம் தான், ‛2.O படம் மூலம் இந்திய சினிமா என்னவென்று சூப்பர் ஸ்டார், கில்லாடி மூலம் இந்த உலக்கு காட்டுவோம், அதற்கான நேரம் துவங்கிவிட்டது என்று லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

லைக்கா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம் ஏற்கனவே நாம் சொன்னது போன்று ‛2.O படத்தின் பர்ஸ்ட் லுக்குடன், டீசரும் அன்று வெளியாகலாம் என தெரிகிறது.

Related Posts