‘2.O’ பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம் : லைக்கா

‘2.O’ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் தான் மும்பையில் வெளியிடப்படுகிறது, மற்றவையெல்லாம் தென்னிந்தியாவில் தான் நடைபெறும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ரோபோ படம் ‘எந்திரன்’. இதன் இரண்டாம் முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் சுமார் ரூ.350 கோடி செலவில் ‘2.O’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். இவர்களுடன் எமி ஜாக்சன் முக்கிய ரோலில் நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

2-o-rajini-poster

இப்படத்தின் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ‘2.O’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் வருகிற நவ. 20ம் தேதி பிரமாண்டமாய் விழா நடத்தி முற்றிலும் புதிய கோணத்தில் வெளியிட உள்ளனர். ‘2.O’ படத்தின் பர்ஸ்ட் லுக் தென்னிந்தியாவில் தமிழகத்தில் வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில், ரசிகர்களை ஏக்கத்தை போக்கும் வகையில் ‘2.O’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘2.O’ என்ற தலைப்பு முழுக்க சின்ன ரோபோக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே அக்ஷ்ய் குமாரின் ஸ்டில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ”’2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் தான் மும்பையில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள், டிரைலர் உள்ளிட்ட மற்ற விஷயங்களின் விழாக்கள் எல்லாம் தென்னிந்தியாவில் நடத்த உள்ளோம். ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts