2.O சண்டை காட்சிகளுக்கு தயாராகும் எமி!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

2o-ami

நடிகை எமி ஜாக்சனுக்கு இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் ஒரு சண்டைக்காட்சி தற்போது படமாகி வருவதாகவும் அதற்காக தான் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் நடிகை எமி ஜாக்சன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த ஷெட்யூல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. அதன்பிறகு சென்னை திரும்பும் படக்குழுவினர், சென்னையில் சில காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

பின்னர் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் பொலிவியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அங்கு ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி படமாகவுள்ளது.

Related Posts