‘2.0’ போட்டோக்கள் ‘லீக்’ ஆனதா ?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தற்போது டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாகப் படமாகி வரும் படம் ‘2.0’. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு அதிக பாதுகாப்புடனும் கெடுபிடியுடனும் ஆரம்பமானது.

2 o rajini

படப்பிடிப்பு தளத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வரக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்கள் கண்டபடி வெளிவந்ததுதான் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

ஷங்கர் அவருடைய படங்களின் படப்பிடிப்பு முடிந்தால் கூட புகைப்படங்களை வெளியிட மாட்டார். அவருடைய படங்களின் புகைப்படங்களை அவர் மட்டுமே பார்த்து ரசித்துக் கொள்வார். தப்பித் தவறிக் கூட அதை மீடியாக்களுக்குக் கொடுத்துவிட மாட்டார். அப்படியே கொடுத்தாலும் ஒன்றிரண்டு புகைப்படங்களுக்கு மேல் தரமாட்டார்.

‘2.0’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டில்லியில் ஒரு விளையாட்டரங்கில் அக்ஷய் குமார் பங்கேற்க நடந்து வருகிறது. வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் உள்ள புகைப்படங்கள் நேற்று இணையதளத்தில் திடீரென வெளியாகின. அதைத் தொடர்ந்து அது வேகமாகப் பரவியது. பலரும் புகைப்படங்களை ஷேர் செய்ய ஆரம்பித்தனர். ஷங்கர் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்த அக்ஷய் குமாரின் வித்தியாசமான தோற்றத்தின் சஸ்பென்ஸ் நேற்று உடைந்துவிட்டது.

யாருமே செல்போன் கூட எடுத்து வர அனுமதிக்கப்படாத போது எப்படி இந்தப் புகைப்படங்கள் வெளியானது என்று தெரியவில்லை.

Related Posts