2 மாதங்களுக்குள் அரச சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் – பிரதமர் தெரிவிப்பு

அரச சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“இரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். எதிர்கால உலகிற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளுக்கு தமது வல்லமையை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

பட்டதாரிகளிடமிருந்து தேவையான சேவை கிடைக்காமை பெரும் பிரச்சினையாகும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு உரையாற்றினார்.

இதேவேளை, நாடுமுழுவதுமுள்ள 57 ஆயிரம் பட்டதாரிகளையும் ஒரே தடவையில் எந்தொரு நிகந்தனையுமின்றி அரச சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜக்ச அரசிடம் வலியுறுத்தி நிலையில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Posts