இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல்போயுள்ளது.
இந்தோனேசியாவின் சுரயபோ நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பயணிகளுடன் சென்ற எயர்ஏசியா விமானசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமே காணாமல் போயுள்ளது.
இன்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடைந்திருக்க வேண்டும் என்றும் அதிகாலையுடன் QZ 8501 விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் இந்தோனேசியா பயணிகளுடன் தென் கொரியாவைச் சேர்ந்த 03பேரும், பிரித்தானியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச்சேர்ந்த மூவரும் காணாமல் போயுள்ளனர்.
கலிமன்ரனுக்கும் ஜாவாவுக்கும் இடையிலேயே விமானம் காணாமல் போயுள்ளதாக அந்தநாட்டு போக்குவரத்து அதிகாரி ஹதி முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகில் கூட்டமான காலநிலையால் விமானம் வழக்கமான பாதையை விட்டு பயணித்துள்ளமையால் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமானத்தை தேடும் பணிகள் தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் தகவல்களை தெரிந்து கொள்ள +622 129 850 801 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.