2 சதவீதமான பகுதியிலேயே கண்ணிவெடிகள் இருக்கின்றன – இராணுவம்

வடக்கு கிழக்கில் 97 முதல் 98 வீதம் வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

army-ruwan-vanikasooreya

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 5,000 சதுர அடி பரப்பிலான நிலப்பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினரின் பங்கு பாரியளவில் காணப்பட்டதுடன் 100ற்றுக்கு 68 சதவீதமான கண்ணி வெடி அகற்றும் பணிகள் இராணுவத்தினராலும் 32 சதவீதமான பணிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts