2 கோடி ரூபா மோசடி: பாதிரியார் கைது

arrest_12 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியே குறித்த பாதிரியார் அப்பாவி மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றிவந்த நிலையிலேயே பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இருபாலை,நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற பகுதிகளிளைச்சேர்ந்தவர்களையே இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றிய பாதிரியார் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தா பொலிஸார். அவர் தொடர்பிலான விபரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Related Posts