2.ஓ படப்பிடிப்புக்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் சென்னை வருகை

கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கப்படுகிறது.

rajini-2-O

இதற்கு பிறகு எந்திரன் படத்தின் 2ம் பாகமான 2.ஓ படத்தில் முழுமையாக நடிக்க இருக்கிறார் ரஜினி. ஏற்கெனவே 2 ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஞ்ஞான கூடம் செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியாரின் பண்ணை இடத்தில் பிரமாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது சர்க்கஸ் கூடாரம் போன்று காட்சியளிக்கும் இந்த செட் 20 கோடி ரூபாய் செலவில் கிரீன்மேட் கலந்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கில்தான் முக்கிய சண்டை காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக தி ராக், பேர்ல் ஹார்பர், டிரான்ஸ்பார்மர் படங்களின் சண்டை இயக்குனர் கென்னி பேட்ஸ் தனது குழுவினருடன் சென்னை வந்துள்ளார். அவரது குழுவினருடன் இங்குள்ள சண்டை கலைஞர்களும் இணைந்துள்ளனர்.

சண்டைக் காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள செட்டில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். படப்பிடிப்புக்காக அதி நவீன கேமராக்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறது. வருகிற 22ந் தேதி முதல் 3ம் கட்ட படப்பிடிப்புகள் இங்கு துவங்கும் என்று தெரிகிறது.

Related Posts