விடுதலைப் போரில் விடுதலை புலிகள் சாா்பில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.
ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் மாலதியின் நினைவாக, அப்பிரதேசத்தில் உள்ள போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியினரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.