1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல்

1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்காக உரிய முறையில் விண்ணப்பித்து சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டும்.

எனவே மேற்கூறப்பட்ட விபரங்களின் படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமும், அக்கறையும் உடையவர்களாயிருப்பின் உங்கள் காணி தொடர்பான விபரங்களை இல : 83, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள மக்கள் பணிமனை அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ இதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று 15/11/2016க்கு முன்னர் பூரணப்படுத்தி கிடைக்கச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் இக் காணிகளை மீட்பதற்குரிய இவர்களுக்குரிய சட்ட ஆலோசனைகள் மற்றும் வழி காட்டுதல்கள் வழங்கப்படும்.

எனவே இச் சந்தர்ப்பத்தை பாதிக்கப்பட்ட சகலரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள் என வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் (NMRO) செயலாளரும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.

Related Posts