1980 இல் இழந்தவர்கள் விபரங்களை தரலாம்

பயங்கரவாதம் காரணமாக வடமாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விபரங்களை கோரியுள்ளது.

ruwan-vanika-sooreyaa

இதுதொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 1980 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் பயங்கரவாதம் காரணமாக காணி மற்றும் வீடுகள் இழந்தவர்கள் கீழ் குறிப்பிடப்படும் விபரங்களுடன் விண்ணப்பபடிவத்தை தயாரித்து பாகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலக்கம் 15/5 பாலதக்ஷ மாவத்தை, கொழும்பு- 3 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும். (தற்போது குடியேற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்)

இது தொடர்பில் முறைப்பாடு செய்பவர்கள் தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, பிரதேச செயலக பிரிவு மற்றும் மாவட்டம் ஆகிய விபரங்களையும் பயங்கரவாதம் காரணமாக கைவிடப்பட்ட காணி மற்றும் வீடு தொடர்பில் விபரங்கள் வழங்கும் போது பெயர், உரிமையாளரின் பெயர், கைவிடப்பட்ட அல்லது இடபெயர்ந்த ஆண்டு, முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாவட்ட பிரதேச செயலக பிரிவு ஆகிய விபரங்கள் உள்ளடக்கிய விண்ணப்பப்படிவத்தை வடிவமைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், இவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் அந்த படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்கலாம் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

2(36)

Related Posts