194 ஓட்டங்களை விளாசிய மெண்டிஸ் : இலங்கை முதல் இன்னிங்ஸில் 494

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் ஆட்டத்தில் 321 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 494 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தத நிலையில், 194 ஓட்டங்களை பெற்று இரட்டைச் சதத்தை தவறவிட்டார்.

மறுமுனையில் அசேல குணரத்ன 85 ஓட்டங்களையும், நிரோஷன் டிக்வெல்ல 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதியாக டில்ருவான் பெரேரா 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹஷன் மிராஷ் 113 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டினை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தனது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பின்றி 30 ஒட்டங்களை பெற்றுள்ளது.

Related Posts