19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் மே.தீவுகள் வசம்

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்ததால் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்தியாவை அந்த அணி 145 ஓட்டங்களில் சுருட்டியது.

இதனால் 146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தி தீவுகள் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கியாசி கார்ட்டி மற்றும் கீமோ பால் ஆகியோரின் அபார ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்வியை சந்திக்காமல் இந்த தொடரில் வீறுநடைபோட்டு வந்த இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கிண்ணத்தை இழந்துள்ளது.

Related Posts