19 இலங்கை சிறுவர்கள் உட்பட 66 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர், குழந்தைகள் மீதான பாலியல் இச்சைக்கொண்ட நபரென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
டெரி டெரன்டையர் என அடையாளம் காணப்பட்ட 53 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேரந்த குறித்த சந்தேக நபர் இலங்கை, தன்சானியா மற்றும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த 66 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 19 சிறுவர்கள், தன்சானியாவை சேர்ந்த 41 சிறுவர்கள் மற்றும் எகிப்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் என 66 சிறுவர்களை இவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கிய 1000 இற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் 100 இற்கு மேற்பட்ட காணொளிகள் என்பன இவரது கணினி வன்தட்டில் இருந்த பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் மீதான விசாரணைகள் நேற்று -20- பிரான்ஸ் நீதிமன்றில் இடம்பெற்றது.
குறித்த விசாரணையில்,
53 வயதுடைய டெரி டெரன்டையர், ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதுடன் இதற்கு அடிமைப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தனது இச்சைக்காக சிறுவர்களை கட்டாயப்படுத்தியும், பரிசு பொருட்கள் மற்றும் பணத்தினை கொடுத்தும் சிறுவர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
சிறுவர்களை மீண்டும் தான் பார்க்க முடியாது என விசாரணையின் போது சந்தேக நபர் கவலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் ஓரினச்சேர்க்கையில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் தன்னை இதிலிருந்து மீட்க உதவ வேண்டுமெனவும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ள சிறுவர்களுடன் நண்பர்களாக பின்னர் நேரடியாக சென்று இவ்வாறான குற்றச் செயல்களை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.