19வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணியில் இரண்டு யாழ். வீரர்கள்

ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்குட்பட்ட 43ஆவது சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெறுகிறது.

foot-ball-hanres-1

ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதிமுதல் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணி நேற்றுமுன்தினம் சீனாவுக்கு பயணமானது.

சீனா சென்ற 19வயதிற்குட்பட்ட இலங்கை கால்பந்தாட்ட அணியில் யாழ். ஹென்றிக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மன்னார் சேவியர் கல்லூரியின் மாணவரும் இடம்பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் செபமாலைநாயகம் யூட்சுபன் மற்றும் அமலதாஸ் மதுஸ்ரன் ஆகிய இரு மாணவர்களுமே யாழ். மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ளனர். மற்றைய வீரர் மன்னார் சேவியர் கல்லூரி மாணவர் தேவராஜா கிளிண்டன்.

Related Posts