184 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா : அஸ்வினின் சாதனையுடன் இந்தியா நிதான ஆட்டம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

India v SA 1st Test D2

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் சுருண்டதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இந்தியா ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்துள்ளது.

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 68 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் 13, ஆம்லா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் எல்கர்-ஆம்லா ஜோடி மேலும் 18 ஓவர்கள் களத்தில் நின்று இந்திய பவுலர்களை சோதித்தது.

38-வது ஓவரை வீசிய அஸ்வின், எல்கரை (37 ரன்கள்) வீழ்த்த, தென் ஆப்பிரிக்காவின் சரிவு ஆரம்பமானது.
இதையடுத்து டிவில்லியர்ஸ் களமிறங்க, மறுமுனையில் ஆம்லா 43 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் வந்த டேன் விலாஸ் 1, பிலாண்டர் 3 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் 63 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 37-வது அரை சதம். டிவில்லியர்ஸ்-சைமன் ஹார்மர் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்க்க, 170 ரன்களை எட்டியது தென் ஆப்பிரிக்கா.

ஹார்மர் 7 ரன்களிலும், பின்னர் வந்த ஸ்டெயின் 6 ரன்களிலும் நடையைக் கட்ட, டிவில்லியர்ஸ் 83 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து மிஸ்ரா பந்துவீச்சில் போல்டு ஆனார். கடைசி விக்கெட்டாக, தாஹிர் 4 ரன்களில் வெளியேற, தென் ஆப்பிரிக்கா 68 ஓவர்களில் 184 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தியா-125/2: முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் தவன் மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

இதையடுத்து முரளி விஜயுடன் இணைந்தார் சேதேஷ்வர் புஜாரா. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் 105 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்க, எல்கர் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அரை சதம் கண்டார் புஜாரா. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 63, கோலி 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

அதிவேக 150 விக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். இந்த மைல்கல்லை தனது 29-வது போட்டியில் எட்டியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னதாக எரபள்ளி பிரசன்னா, அனில் கும்ப்ளே ஆகியோர் 34 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இந்தியர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

இதுதவிர சர்வதேச அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்பிரிக்காவின் ஹக் டேபீல்டு ஆகியோருடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் அஸ்வின்.

இந்திய துணைக் கண்டத்தில் 13 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், ஆசிய மண்ணில் முதல் 20 போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் வக்கார் யூனிஸுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆசிய மண்ணில் விளையாடிய முதல் 20 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் (126) வீழ்த்தியவர் என்ற சாதனையும் அஸ்வின் வசமாகியுள்ளது.

இதுதவிர “ஓபனிங்’ பவுலராக பந்துவீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின்.
கடந்த 105 ஆண்டுகளில் இந்த சாதனையை புரிந்த முதல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைத் துளிகள்

5 – இந்தத் தொடரில் மட்டும் இதுவரை 5 முறை (முதல் இன்னிங்ஸில் எடுத்த 63 ரன்கள் உள்பட) 50-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்.

7 – முதல் இன்னிங்ஸில் 201 அல்லது அதற்கு குறைவான ரன்களுக்குள் ஆட்டமிழந்த பிறகு இந்தியா முன்னிலை பெறுவது இது 7-வது முறையாகும். இதற்கு முன்னர் 2011-ல் பார்படோஸில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 201 ரன்களில் சுருண்ட இந்தியா, பின்னர் மேற்கிந்தியத் தீவுகளை 190 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 11 ரன்கள் முன்னிலை பெற்றது.

5 – 184 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் ஆசிய மண்ணில் 5-வது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

5 – ஒரு போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட்டான 5-வது இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன். சேவாக், வாசிம் ஜாபர், ஃபரூக் என்ஜினியர், பங்கஜ் ராய் ஆகியோர் மற்ற நால்வர்.

Related Posts