இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 183 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் நேற்று காலி சர்வதேச விளையாட்டரங்களில் ஆரம்பமாகிய முதலாவது போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
எனினும் அந்த அணியின் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன 9 ஓட்டங்களுடனும் குஷல் சில்வா 5 ஓட்டங்களுடனும் வௌியேறி ஏமாற்றமளித்தனர்.
அத்துடன் லகிரு திரிமானே மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரும் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாது அடுத்தடுத்து வௌியேறிய நிலையில் தடுமாறிய இலங்கை அணிக்கு, அணித் தலைவர் மெத்தியூஸ் (64 ஓட்டங்கள்) சற்று ஆறுதலளித்தார்.
பின்னர் அவருடன் இணைந்த தினேஷ் சந்திமாலும் (59 ஓட்டங்கள்) சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.
அந்த அணி 49.4 ஓவர்களை எதிர்கொண்டு 183 ஓட்டங்களைப் பெற்ற போது சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 128 ஒட்டங்களைப் பெற்றுள்ளது. தவான் 53 ஒட்டங்களுடனும் கோலி 45 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.