நாடு முழுவதும் நிலவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடைவெளிகளை நிரம்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1815 பேருக்கான இடைவெளி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டதாகவும், இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தோற்றியதாகவும், இவர்களில் 4 ஆயிரம் பேரின் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளதாகவும், பெறுபேறு வெளியாகியுள்ளவர்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.