18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் இராணுவப் பயிற்சி?

சமுதாயத்தை மேலும் ஒழுக்கமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்படவேண்டும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர யோசனை முன்வைத்துள்ளார்.

அமைச்சரின் இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கரா, இந்த நடவடிக்கை நாடு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும் என்று குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் பிற துறைகளுக்கு அரசு இராணுவ பணியாளர்களை நியமித்துள்ளது என்றும் அவர்களை மற்ற அரச அமைப்புகளுக்கு அனுப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் நாணயக்கார குறிப்பிட்டார்.

“அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியபோது, அது முழு நாட்டையும் இராணுவமயமாக்கவும் அதன் அதிகாரத்தை பலப்படுத்தவும் முயற்சிக்கிறது.

பொதுமக்களுக்கு ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகள் தேவைப்பட்டாலும், அனைத்து குடிமக்களும் இராணுவப் பயிற்சி பெறத் தேவையில்லை” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை மாற்றும் முயற்சியாக இதுபோன்ற திட்டங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்றார்.

Related Posts