இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு உலகளாவிய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனினும் இவர்கள் மீது வரி சுமத்தப்படாது. இந்த இலக்கத்தை கொண்டு சிகிரியா மற்றும் நூதனசாலைகளுக்கு இலவசமாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்குகளை இலகுவாக திறக்க முடியும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உள்நாட்டு சிறை சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு உலகளாவிய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எனினும் இவர்கள் மீது வரி சுமத்தப்படாது. இந்த இலக்கத்தை கொண்டு சிகிரியா மற்றும் நூதனசாலைகளுக்கு இலவசமாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்குகளை இலகுவாக திறக்க முடியும் .
எனவே இவ்வாறான விசேட திட்டங்களின் ஊடாக புதிய இலங்கை பிரஜைகளை நாம் உருவாக்கவுள்ளோம். மேலும் இலாபம் பெறும் புண்ணியஸ்தலங்கள் மீது வரி விதிப்பதில் தவறில்லை. புண்ணியம் செய்வதே புண்ணியஸ்தலங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். இலாபம் பெறுவது நோக்கமல்ல.
இறைவரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் ஊடாக 2020 ஆம் ஆண்டாகும் போது நேரடி வரி வருமானத்தை 40 வீதமாக அதிகரிக்கவும் மறைமுக வரியை 60 வீதமாக குறைக் கவும் முடியும் என் றார்.