18 லிற்றர் எரிவாயு சிலிண்டருக்கான விலை நிர்ணயம்

எரிவாயு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய 18 லிற்றர் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவுக்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன முன்வைத்த இத் திட்டத்திற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய எரிவாயு சிலிண்டர் 1,395 ரூபா விலையில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 1, 495 ரூபாவாக இருக்கும்போது 18 லிற்றர் எரிவாயு சிலிண்டரை 1,395 ரூபா விலையில் விற்பனை செய்வது நியாயமற்றது என்று வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், புதிய எரிவாயு சிலிண்டரில் உள்ள வாயுவின் அளவை கிலோ கிராமில் பதிவு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Posts