நாட்டிலுள்ள 18 தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு 2015 ஆம் கல்வியாண்டுக்கான 32 வகையான மூன்றாண்டு கால ஆசிரியர் கல்வி தொடர்பான சேவை முன்தொழிற்பயிற்சிகளைப் பயில்வதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வியமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
25 வயதிற்குட்பட்டு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேவையான இசட் புள்ளிகளைப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
32 வகையான பாடநெறிகளுக்கு தேவையான தகுதிகள் நிபந்தனைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் 08.05.2015 வர்த்தமானியில் வெளியாகியுள்ளன.
ஒருவர் மூன்று பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஒருவர் ஒரு விண்ணப்பத்தை மாத்திரமே அனுப்பலாம். விண்ணப்ப முடிவுத்திகதி இம் மாதம் 29 ஆம் திகதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.