எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவுடனான எட்கா (ETCA) உடன்படிக்கை உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.