17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ளமையினால் உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை தேசிய புகைப்படச்சங்கம் வேண்டுகோள் விடுத்துளள்து.
ஓகஸ்ட் 19ஆம் திகதி தேசிய மற்றும் சர்வதேச தெரிவுக்குழுவினர் அடங்கிய குழுவினால் படங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. கண்காட்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28, 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
புகைப்படங்களை திறந்த Colour, Monochrome, nature மற்றும் Portralt ஆக அனுப்பி வைக்கமுடியும்.
மேலதிக தகவல்களைwww.npasslanka.orgஇணையதள முகவரியினூடாக அல்லது 0712791026, 0777751819, 0777399256, 0714268090 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு பெற்றுகொள்ளலாம்.