வடக்குகிழக்கு மாகாணங்கள் உட்பட 16 மாவட்டங்களில் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்காக 168 பட்டதாரிப் பயிலுநர்களுக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பில் வைத்து நியமனம் வழங்கப்படவுள்ளதாகச் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வருடம் பட்டதாரிப் பயிலுநர்களாக அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் ஒவ்வொரு அமைச்சுக்கும் உள் வாங்கப்பட்டு வருகின்றார்கள். இந்த வகையில் சமூக சேவை அமைப்பும், ஒவ்வொரு பிரதேச செயலர் ரீதியாக தனது அமைச்சுக்கு ஒவ்வொரு பட்டதாரிப் பயிலுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய வடக்குகிழக்கைச் சேர்ந்த 7 மாவட்டங்களுக்கும்,அனுராதபுரம், பொலநறுவை, மாத்தளை, மாத்தறை, அம் பாந்தோட்டை, களுத்துறை, பதுளை, நுவரெலியா, இரத்தி னபுரி ஆகிய மாவட்டங்களிலுமே இந்த 168 நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.
கொழும்பிலுள்ள சமூக சேவை கள் அமைச்சில் வைத்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்த நியமனங் களை வழங்கவுள்ளார் என்றார்.