16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

அதற்கமைய, வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts