16 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைத்தொடர்பு வயர்கள் திருடிய இருவர் கைது

arrest_1யாழ். பண்ணை ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமராய்ச்சி இன்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கை ரெலிகோம் நிறுவனத்தில் இருந்த 16 இலட்சம் பெறுமதியான தொலைத்தொடர்பு இணைப்பு வயர்கள் திருடப்பட்டுள்ளதாக ரெலிகோம் நிறுவனத்தினரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று நாவாந்துறை ஜந்து சந்தி பகுதியைச் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இரும்பு வியாபாரம் மேற்கொள்ளும் இந்த இரு இளைஞர்களும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

Related Posts