புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த சுந்தர்லிங்கம் யோன்சன் வயது 13 என்ற மாணவனை கடந்த 15 ம் திகதி முதல் காணவில்லை என அவரது தந்தையாரால் புதுக்குடியிருப்பு காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுவனின் தந்தையாரான சுந்தரலிங்கம் என்பவர் மாற்றுத்திறனாளி என்பதோடு இந்த மாணவனின் தாயாரை செல்வீச்சின்போது பறிகொடுத்தும் 3பெண் சகோதரர்கள் பராமரிப்பு இல்லங்களிலும் வாழ்ந்துவருவதோடு சகோதரன் ஒருவன் கடந்த 2015ஆம் ஆண்டு வற்றாப்பளை பொங்கல் திருவிழாவின்போது காணாமல் போயிருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான தந்தையாரை இந்த சிறுவனே பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.