15 பல்கலை மாணவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கண்டி நீதவான் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி குறித்த 15 மாணவர்களும் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர்.

பின்னர் அவர்களை இன்று வரை (2ம் திகதி) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் நிர்வாண காட்சிகள் இருக்கின்றதா இல்லையா என்பது குறித்து ஆராய, அவற்றை உரிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க, நீதிமன்றத்தில் இன்று பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related Posts