15 நாளில் தயாரான படம்

ஜித்தன் 2, கிரிங் கிரிங் போன்ற திகில் படங்களை இயக்கியவர் ராகுல். இவர் தற்போது இயக்கி இருக்கும் 3வது திகில் படம் 1 ஏ.எம் இதில் புதுமுகங்கள் மோகன், சவ்ரவ், பிரதீப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.என்., சினிமா சார்பில் இயக்குனர் ராகுலே தயாரித்தும் உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

இது ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்ட திகில் படம். அதிகாலை ஒரு மணிக்கு நடக்கும் ஒரு சம்பவத்தை பின்னணியாக கொண்டது.

இதில் பயமுறுத்தும் பேய் கிடையாது. வில்லன்களை பழிவாங்க ஒரு பேய் எப்படியெல்லாம் உதவுகிறது என்கிற பாசிட்டிவான பேய் கதை.

பேய்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கின்றன, அதைப் பற்றியும் படம் பேசுகிறது.

இதில் நடித்திருக்கும் அனைவருமே கல்லூரி மாணவர்கள் தான். 15 நாளில் படத்தை முடித்து விட்டோம். தணிக்கை குழு எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளது. வருகிற 24-ம் தேதி படம் வெளிவருகிறது என்றார் ராகுல்.

Related Posts