இலங்கையில் இருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் வாழும் 15 தமிழ் மாணவர்கள் அச்சிறுபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறி படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பள்ளியில் இருந்து திடீரென்று நீக்கியுள்ளது தனியார் பள்ளி நிர்வாகம்.
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஒரு வாடகை வீட்டில் இலங்கை தமிழர்கள் சுமார் 55 பேரை தங்க வைத்துள்ளனர். மேலும், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள், பெங்களூரைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த குழந்தைகளும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழந்தைகள், அதே பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளியில் படித்து வந்த 15 இலங்கை தமிழ் அகதி மாணவர்களை நீக்கி உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. போதிய ஆவணம் இல்லாத்தால்தான் மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், இனி மேல் போதிய ஆவணங்கள் இல்லாமல் எந்த மாணவரையும் சேர்த்துக் கொள்ள போவதில்லை என்றும் தனியார் பள்ளி அறிவித்துள்ளது.
தனியார் பள்ளியின் இந்த திடீர் முடிவால், இலங்கை தமிழ் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது,