14 வயது சிறுமி மீது வன்புணர்வு – பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

14 வயது சிறுமியை பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரே பொலிஸ் உத்தியோகத்தரிடம் அனுப்பியதாக சிறுமி நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணையானது எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது தாயாரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியின் மருத்துவ அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

மேலும், குறித்த வழக்கின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியை 31 ஆம் திகதி மன்றில் ஆயராகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் நேற்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆயராகி இருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

Related Posts