13+ பற்றி தெரியுமா?: த.தே.கூட்டமைப்பிடம் ரெமீடியஸ்

Mureyappuமாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்’ 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற மாகாணசபை பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ‘காணி, பொலிஸ் அதிகாரம் பற்றி பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை என்று கூறியது உண்மையா? காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கப்பட போவதாக கூறியது உண்மையா? எது உண்மை?’ என அவர் கேள்வி எழுப்பினார்.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொய்யான பிரசாரங்களை செய்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான் ஆறு ஏழு மாதங்கள் ஒரு அங்கத்தவனாக இருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மாநகர சபையில் பட்ட துன்பங்கள் ஏராளம். மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க வற்புறுத்தப்பட்டுள்ளேன்.

அபிவிருத்தி திட்டங்களிலோ, ஆதரவு வழங்கக்கூடாது. எதிர்க்கட்சியாக பணியாற்றுமாறும் கட்டாயப்படுத்தினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எந்த வித கொள்கை கோட்பாடும் அற்றவர்கள். எதிர்ப்பது மட்டுமே அவர்களது வாழ்க்கையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபை, அரசாங்கத்தின் கட்சி என்ற வகையில் பல அபிவிருத்திகளை சந்தித்துள்ளது. மக்களுக்கு உரிமை வேண்டுமென்று கேட்கின்றார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மக்களுக்கு உரிமையை தருவதற்கு தயாராக இருக்கின்றார். அந்த உரிமை மக்களுக்கானது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கானது அல்ல. சம்பந்தனுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கோ அல்லது சுமந்திரனுக்கோ அல்ல.

யாழ். மாவட்டத்தில் சுதந்திரமாக வாழும் மக்களுக்கே அந்த உரிமை தேவை, நாங்கள் நிரந்தரமாக வாழ்வதறந்கு இடம்வேண்டும். சுதந்திரமாக வாழ வேண்டும். அதனை தீர்மானிக்க வேண்டியது மக்களாகிய நீங்களே’ என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள குறிப்பிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேடை அமைத்துக் கொண்டு இருப்பது எமது உரிமை அல்ல. உரிமை என்பது சமூக, கலாசார, பொருளாதாரத்தினை பெற்று ஏனைய மாவட்டங்களுடன் சமாதானத்துடன், பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து சமமாக வாழ வேண்டும். அதுவே எமது உரிமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு கொண்டு வருவதற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் திடசங்கட்பம் கொண்டுள்ளார். அதற்கு நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக போட்டியிட போவது எமது இனம். தமிழர்களையும், முஸ்லிம்களையும் பாரம்பரியமாக கொண்ட எமது இந்த பூமியில் தேர்தலில் நிறுத்தியுள்ளார். வேறு மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களையோ, வேறு இனத்தவர்களையோ ஜனாதிபதி அவர்கள் தேர்தலில் நிறுத்தவில்லை.

நிர்வாக அலகு வேண்டுமென்று கூறுகின்றீர்கள். அந்த நிர்வாக அலகினை, உங்கள் இன்ப துன்பங்களில் பங்குபற்றி அந்த பூமியில் நிரந்தரமாக வாழ்கின்ற வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். அவர்களை ஆதரியுங்கள்.

1949 ஆம் அண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சிய யாராவது ஒருவருக்கு 1 ரூபா செலவில் ஏதாவது வாங்கி கொடுத்துள்ளதா? 1949 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் இன்றைக்கு பேரப்பிள்ளை கண்டு விட்டார்கள்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் செய்யப்பட்ட ஒரு ரூபாய் பெறுமதியான வேலையை சொல்லுங்கள் பார்ப்போம். அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியை தவிர்த்து, ஒரு ரூபாய் பணத்தினை செலவழிப்பார்களாயின் நான் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன்.

செய்வதற்கான எண்ணம் இருக்கின்றதா? வெளிநாடு போகின்றார்கள். வன்னி மக்களுக்கு ஏதாவது செய்கின்றோம் என்று கேட்கின்றார்களா, அல்லது ஏதாவது திட்டம் இருக்கின்றதா? தமிழ் தேசிய பேசுகின்றவர்கள், தமிழ் தேசியத்திற்கு என்ன செய்தார்கள். நூற்றுக்கு நூறு கூட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்களை எமக்கு தலைவர் ஆக்குகின்றார்கள்.

பயங்கரவாத தடைச் சட்டம் என்ற கொடிய சட்டம் இருக்கின்றது. அந்த சட்டத்தினை நீக்க வேண்டுமென்று நான் பல இடங்களில் குரல் கொடுத்துள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள விநாயகமூர்த்தி ஜயாவை தவிர்ந்த யாராவது சட்டத்தினை நீக்க கோரி வாய்திறந்து கதைக்கின்றார்களா?

1976 ஆம் அண்டு வட்டுக் கோட்டை தீர்மானத்தின் பின்னர் கொண்டு வந்த தமிழர் தீர்மானம், அந்த தீர்மானத்தினை அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் கொண்டு வந்தார்கள். அப்போது, பாராளுமன்றத்தில் இருந்த சம்பந்தன் ஆனந்தசங்கரி, அதை எதிர்த்தார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட ஆட்சி போதுமென்று இருந்த தமிழரசு கட்சியினர் இப்போது மாகாண சபை வேணும் என்று கூறுகின்றார்கள். இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கொள்கை என்றார் .

Related Posts