13 ஆவது திருத்தச் சட்டம் தீர்வாகாது: சுவாமிநாதனுடன் முரண்பட்டார் சம்பந்தன்

13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கருத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முரண்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் நினைவுதினம், கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். இதனை மறுதலித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் சாசனத்தில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் வந்திருந்தாலும்கூட, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அது தீர்வாக அமையவில்லையெனக் குறிப்பிட்டார்.

அவ்வாறு தீர்வாக அமையவும் முடியாதென குறிப்பிட்ட சம்பந்தன், 13இலிருந்து இன்று வெகுதூரம் சென்றுவிட்டோம் என சுட்டிக்காட்டினார்.

Related Posts