13 ஆவது திருத்தச்சட்டம் செல்லுபடியாகாது! – சி.வி விக்னேஸ்வரன்

பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக சிறுபான்மையினர் என அடையாளப்படுத்தும் நாங்கள் ஆனால் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக காணப்படும் எங்களுடைய இந்த ஆயுதம் தான் இந்த கட்டமைப்பு என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கட்டமைப்பின் அவசியத்தை பற்றி எவருக்கும் கூற வேண்டிய அவசியம் கிடையாது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எந்தவொரு மக்கள் கூட்டம் தனித்து ஒரு நாட்டில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே எங்களுக்கு இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் செல்லுபடியாகாது, சரிவராது சர்வாதிகாரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் என தெரிவித்தார்.

Related Posts