13இல் கை வைத்தால் ஆட்சி கவிழும்: த.தே.கூ

tnaஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இலங்கை அரசாங்கம் கைவைத்தால் ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்படும்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் என்பது இந்தியா – இலங்கை ஆகிய இரண்டு நாட்டு உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டம். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இரு நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமொன்றை மஹிந்த அரசு தான்தோன்றித் தனமாக இல்லாதொழிக்க முடியாது என்று த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ’13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக தென்னிலங்கையில் பல அமைச்சர்கள் குரலெழுப்பி வருகின்றனர். இவ்வாறான எதிர்ப்புக்கு மத்தியில் 13இல் ஏதாவது செய்ய அரசாங்கம் முற்பட்டால் ஆட்சி கவிழும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் ஒரு குழப்பத்தினைக்கொண்டு வருவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ‘வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கப் போதில்லை. தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஏகோபித்த கட்சியாக ஏற்றுக்கொள்வதால் நாங்கள் வெற்றிபெறுவது நிச்சயம்’ என்றும் அவர் எதிர்வு கூறினார்.

Related Posts