13வது திருத்த சட்டமூலம் தெரிவுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

daklas13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

அவ்வாறு அனுப்பினால் இந்த சட்டமூலம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இதனைப்பற்றி ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது.

இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்கு நீண்ட காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பாதுவிடின் அது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கும் என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்த சட்டமூலத்திற்கான எதிர்ப்பை ஸ்ரீலங்கா முஸ்லாம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஹசன் அலி தெரிவிக்கையில், இது பற்றி ஜனாதிபதிக்கு எழுதவுள்ளோம், இந்த சட்டமூலத்தை எதிர்க்கவிருக்கின்றோம் இது அதிகாரங்களை குவிக்க வழிசெய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts