128 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆதரவற்ற மாற்று திறனாளிகளுக்கு இல்லம் நடத்துகிறார். அநாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். ராகவேந்திரருக்கு கோவில் கட்டியிருக்கிறார். அடுத்து தன் அம்மாவுக்கு கோவில் கட்டி வருகிறார்.

ragava-larance-1

மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் ஒரு கோடியை, 100 இளைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். அவரின் இன்னொரு சத்தமில்லாத சேவை குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவுவது. குழந்தைகளுக்கு இதயத்தில் கோளாறு வருவதும். அதற்கு ஆபரேஷன் செய்ய வேண்டியதும் மிகப்பெரிய கொடுமை. அதற்கு லட்சக் கணக்கில் செலவாகும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

சமீபத்தில் ஒரு குழந்தை ராகவா லாரன்சின் உதவியால் இந்த பூமியில் மறுபிறப்பு எடுத்துள்ளது. இது ராகவா லாரன்சால் உயிர் கொடுக்கப்பட்ட 128வது குழந்தை. வருமானத்தில் எஸ்டேட் வாங்கும், கோடிகளை கொட்டி கொடுத்து ஆடம்பர கார் வாங்கும், நிரந்தர வருமானத்திற்கு கல்யாண மண்டபம் கட்டும் நடிகர்கள் லாரன்சை கொஞ்சம் திரும்பி பார்ப்பார்களா?

Related Posts