121 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்க​ளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது.

டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெப்டு பிளவ்சிஸ் 105 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

அதன்படி இந்த தொடரில் தென்னாபிரிக்க அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Related Posts