அதிக வேகம் கொண்ட 1200 சி.சி.இன்ஜின் சக்தியுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் செல்வாக்குள்ள ஒருவரின் புதல்வரின் உதவியுடன் வெளிநாட்டிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பு வாழைத்தோட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இதனை பொலிஸார் மீட்டுள்ளனர். பாதால உலக குழுவினர் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுபோன்ற, அதிவேக சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இலங்கையிலுள்ள பாதைகளில் பயணிப்பது சட்ட முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.