12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை!

நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், புத்­தளம், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை, மாத்­தளை மற்றும் குரு­ணாகல் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மாவட்­டங்­களில் மணித்­தி­யா­லத்­துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­கோ­ண­மலை கடற்­ப­ரப்­பி­லி­ருந்து புத்­தளம் வழி­யாக காங்­கே­சன்­துறை மற்றும் அதனை அண்­மித்த கடற்­ப­ரப்­பு­க­ளிலும், மாத்­தறை தொடக்கம் மட்­டக்­க­ளப்பு வழி­யாக அம்­பாந்­தோட்டை வரை­யான கடற்­ப­ரப்­பு­க­ளிலும் காற்றின் வேகம் அதி­க­ரித்துக் காணப்­படும் என்று எதிர்வுகூறப்­பட்­டுள்­ளது. எனவே மீனவர்கள் மீன்­பிடித் தொழி­லுக்குச் செல்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மேல், தென், மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் 100 மில்லி மீற்­றரை விட அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகக் கூடும் என்று எதிர்வுகூறப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக மேல் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­க­ளிலும், காலி மற்றும் மாத்­தறை மாவட்­டங்­க­ளிலும் அதிக மழை வீழ்ச்சி பதி­வாகும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் கொழும்பு – புறக்­கோட்­டையில் 41.5 மில்லி மீற்றர் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதிக காற்று மற்றும் மின்னல் தாக்­கத்­தினால் நூற்­றுக்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இம்­மா­தத்தில் மாத்­திரம் அதிக காற்­றினால் கொழும்பில் அதி­களவு மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதற்­கி­ணங்க கொழும்பில் 267 குடும்­பங்­களைச் சேர்ந்த 823 பேரும், கம்­ப­ஹாவில் 151 குடும்­பங்­களைச் சேர்ந்த 649 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர கேகாலை, புத்தளம், குருணாகல், வவுனியா, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts