12 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

Related Posts