மணற்காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில் நின்றிருந்தபோது, கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது தான் ஒரு முன்னாள் போராளி என்றும், இவ்வாறு தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கூறியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் உடலில் ஷெல் சன்னங்கள் பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன் சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.