சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொண்டவர்களில் 1,197 பேர் 2013ஆம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராசா பிரதீபன் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான கோரிக்கை விண்ணப்பப் படிவங்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ளவர்களின் பெயர் பட்டியல்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் சமூக சேவை அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விண்ணப்பப்படிவங்களை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் தி;ட்ட அலுவலக முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஓய்வூதியத்தை உரியவர்கள் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.