117 ரன்னில் சுருண்டது மிகவும் மோசமான நாள்: இலங்கை அணியின் பயிற்சியாளர் காட்டம்

நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 27.4 ஓவர்களை மட்டும் சந்தித்து 117 ரன்களில் சுருண்டது.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8.2 ஓவரிலேயே 118 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் குப்தில் 30 பந்தில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 93 ரன்கள் குவித்தார்.

இந்த படுதோல்வியை இலங்கை கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இநத அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்னே, இது உண்மையிலேயே மிகவும் மோசமான நாள் என்று கூறினார்.

இதுகுறித்து ஜெயரத்னே கூறுகையில் ‘‘இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இன்றைய நாள் மகவும் மோசமானது. இந்த தோல்வி ஏமாற்றத்தை அளிக்கிறது. இப்படி மோசமாக விளையாடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் போட்டியில் போட்டியை டிரா செய்யும் நிலைமையிலும், வெற்றி பெறும் நிலைமையிலும் இருந்தோம். ஆனால், அதன் பிறகு நடந்த இந்த போட்டியில் விளையாடியது மிகவும் மோசமான செயல்பாடு’’ என்றார்.

Related Posts