11 நாட்களுக்குப் பின்னர் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு தரையிறக்கம் 6 நாட்களுக்கு பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts