அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 1 இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.
பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால், பயிலுனர் பதவிகளிற்கான முதலாம் கட்ட ஆட்சேர்ப்பிற்கான விபரங்கள் இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
100,000 வேலைவாய்ப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது.
இதற்கான மாதிரி விண்ணப்படிவத்தை நீங்கள் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெப்ரவரி 15ம் திகதிக்கு முன்னர் கிராமசேவகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
1.தகைமை
க.பொ. சாதாரண தரம் சித்திக்கான மட்டத்தை விட குறைந்த மட்ட கல்வித் தகமை உடையவராக இருத்தல் (கல்வித் தகமை குறைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
விண்ணப்பம் கோரப்படும் இறுதி நாளில் 18 வயதுக்குக் குறையாமலும் 40 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் (35 வயதுக்கு குறைந்த விண்ணப்பதாரர்களுக்கு முதலாவது முன்னுரிமை வழங்கப்படும் என்பதுடன் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த முக்கியத்துவம்)
சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகமை பெற்ற ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறாத குடும்பத்தில் வேலை வாய்ப்பு இல்லாத உறுப்பினர்களாக இருத்தல் அல்லது சமுர்த்தி நிவாரணம் பெற்ற குடும்பத்தின் வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருத்தல் அல்லது
நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினர்கள் உள்ள குடும்பத்தில் வேலை வாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருத்தல்
விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் வசிப்பவராக இருத்தல்
2.பயிற்சிக்காக தெரிவு செய்தல்
2.1 ஒரு குடும்பத்தில் உள்ள மேற்படி இலக்கம் 1ல் குறித்த தகமையை பூர்த்தி செய்த ஒரு விண்ணப்பதாரி பற்றி மட்டும் பரிசீலனை செய்யப்படும்.
2.2 விண்ணப்பதாரி வசிக்கும் கிராமத்துக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் உள்ள வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் மற்றும் விண்ணப்பதாரி கோரிய பயிற்சிக்களம் ஆகிய அனைத்தும் கவனத்திற் கொண்டு ஏற்ற தொழிற்பயிற்சி தீர்மானிக்கப்படும்.
2.3 விண்ணப்பதாரி வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பிரதேசங்களுள் அல்லது அண்மையிலுள்ள பயிற்சி நிலையங்களில் இந்த பயிற்சி வழங்கப்படும்.
2.4 ஏற்ற பயிற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அண்மையிலுள்ள பிரதேசங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
ஆறு மாதங்கள் தொடரும் பயிற்சி காலத்தில் மாதமொன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னர் பயிற்சி பெற்ற தொழிற்களத்திற்கு ஏற்ப நிரந்தரமாக வசிக்கும் பிரதேசத்துக்குள் அரசாங்கம் அனுமதித்த ஆரம்ப தொழில் நுட்பம் சாராத (பி.எல் 1) சம்பளம் மற்றும் கொடுப்பனவு உடைய அரசாங்க நிரந்தர பதவிக்கான நியமனம் பெறும் வாய்ப்பு பயிற்சி பயனாளிக்கு கிடைக்கும். 10 வருடங்கள் திருப்தியான பரந்த சேவை காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் ஓய்வூதிய உரிமை துறைகள்.
பயிற்சிக்கான சம்பந்தப்பட்ட களங்கள்
- விவசாய உற்பத்தி உதவியாளர்
- பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவை உதவியாளர் மக்கள் சுகாதார மேம்பாட்டு உதவியாளர்
- அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்
- சுற்றாடல் முகாமைத்துவ உதவியாளர்
- விற்பனை சேவை உதவியாளர்
- போக்குவரத்து நடவடிக்கை உதவியாளர்
- கணினி தகவல் தொழில் நுட்பம், தொலைபேசி செயற்பாடு மற்றும் தொலைத்தொடர்பு உதவியாளர்
- போதைப்பொருள் நிவாரண நடவடிக்கை உதவியாளர் சமையலாளர், உணவு விடுதி சேவையாளர் மற்றும் உணவுச்சாலை உதவியாளர்
- ஐந்து நட்சத்திர சுற்றுலா ஹோட்டல், பங்களா உதவியாளர் மற்றும் தோட்ட அலங்கார உதவியாளர் விளையாட்டு நிறுவன உடற்பயிற்சி நிலைய உதவியாளர், விளையாட்டரங்கு, நீச்சல் தடாக உதவியாளர் மற்றும் உயிர் பாதுகாப்பு உதவியாளர்
- தச்சு தொழிலாளர் மற்றும் தச்சுத்தொழில் உதவியாளர் ஆடைகள் தையலாளர்
- மேசன் பணியாளர் மற்றும் மேசன் உதவியாளர் ஒப்பனை அலங்கார நிலையம் உதவியாளர்
- மின்சார தொழில்நுட்ப பணியாளர் மற்றும் மின்சார தொழில்நுட்ப உதவியாளர் சேவை
- சாரதி மற்றும் சாரதி உதவியாளர்
- மிருக பராமரிப்பு மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகள் உதவியாளர்
- எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வாகனங்கள் சுத்திகரிப்பு சேவை உதவியாளர்
- வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திருத்த சேவை உதவியாளர்
- ஆயுதம் தரிக்காத பாதுகாப்பு சேவையாளர்
- சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி உதவியாளர்
- பொருத்துனர் (வெல்டிங்) உதவியாளர் மற்றும் நீர் குழாய் தொழில்நுட்பவியலாளர்
வீடு பராமரிப்பு, நலன்புரி மற்றும் பராமரிப்பு சேவை
விண்ணப்பப்படிவங்கள்
இந்த அறிவிப்பில் தரப்பட்ட மாதிரி விண்ணப்ப படிவத்துககு ஏற்ப தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தை உங்களுடைய சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை 2020.02. 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீங்கள் வசிக்கும் கிராம சேவையாளர் பிரிவில் கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.